பிக்பாஸ் 7ல் வெளியேறிய முதல் போட்டியாளர்… எதிர்பாராததை எதிர்பாருங்கள் – அதிர்ச்சி தகவல்!

Author: Shree
7 October 2023, 1:51 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இந்நிலையில் இந்த வரம் நாமினேஷனில் பிரதீப், யுகேந்திரன், ஜோவிகா, அனன்யா ராவ், ரவீனா தாஹா, ஐஷு, பாவா செல்லதுரை, யுகேந்திரன் ஆகியோர் உள்ளனர். இதில் யார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் முதல் போட்டியாளர் யார் என்ற கேள்வி ஆடியன்ஸ் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இதில் அனன்யா ராவ் குறைந்த அளவு வாக்குகள் பெற்று பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?