அந்த விஷயத்தால வாழ்க்கையே போயிருச்சு.. விஜய் டிவி விலகல் குறித்து முதல் முறையாக மனம் திறந்த டிடி..!

Author: Vignesh
18 August 2023, 4:00 pm

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் டிவி பற்றி பகிர்ந்துள்ளார்.

Dhivyadharshinis-updatenews360

ஒரு காலத்தில் விஜய் டிவியில் டிடி இல்லாத ஷோவே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். ஆனால், இப்போதெல்லாம் டிவி பக்கமே இவர் வருவதில்லை. அதற்கு பதில் இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் என தொகுத்து வழங்கி வருகிறார்.

dd-updatenews360

இவர், விஜய் டிவியில் இருந்து வெளியேறியது குறித்து ஒரு பேட்டியில், பேசியுள்ளார். அதில் அவர், மணிக்கணக்காக படப்பிடிப்பு நேரத்தில் நின்று கொண்டிருந்ததால் தனக்கு காலில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், பொதுவாக விஜய் டிவியில் தான் தொகுத்து வழங்காத நிகழ்ச்சியே இல்லை என்றோ சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன்.

அப்போதெல்லாம் தொடர்ச்சியாக பல மணி நேரங்கள் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும், அப்போது முழுக்க முழுக்க தொகுப்பாளர்கள் நிற்க வேண்டும் அது எனக்கு மட்டுமல்ல தொகுப்பாளர்களாக இருக்கும் அனைவருக்கும் இதே மாதிரி நிலைமைதான். ஒரு கட்டத்தில் எனது உடல்நிலை சரியில்லாமல் போனதால் எனக்கு நிகழ்ச்சிகள் குறைய தொடங்கி விட்டது. ஒரு கட்டத்தில் நின்று கொண்டே அதிகப்படியான நேரம் ஆங்கரிங் செய்ததால் வாழ்க்கையில் பல விஷயங்களை இழந்து சக்கர நாற்காலியில் இருந்தேன். எனவேதான் விஜய் டிவியிலிருந்து வெளியேறினேன் என டிடி தெரிவித்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 614

    0

    0