பயந்து நடுங்கிய VJ ரம்யா.. உடற்பயிற்சியால் ஏற்பட்ட நிலை குறித்து பகிர்ந்த ஷாக்கிங் புகைப்படம்..!

Author: Vignesh
16 June 2023, 1:30 pm

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

vj ramya - updatenews360

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி, பிரியங்கா என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல் மொழி, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களை விஜே ரம்யா நடித்து இருக்கிறார்.

ஏற்கனவே, சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார்.

vj ramya - updatenews360

அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் ரம்யா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில் ரம்யா உடற்பயிற்சி செய்யும் போது 40 கிலோ எடை கொண்ட தம்பிள்ஸ் முகத்தில் விழுந்ததாகவும், அருகில் உள்ளவர்கள் உடனடியாக முதலுதவி செய்த காரணத்தினால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

vj ramya - updatenews360

மேலும், முறையான மேற்பார்வையின் வழிகாட்டுதலின்படி தான் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் இல்லை என்றால் சில விபரீதங்கள் நடக்கும் எனவும், தன்னுடைய ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் ரசிகர்களுக்கு நீங்கள் கூடிய விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?