‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்ட ப்ரியங்கா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Rajesh
4 March 2022, 6:21 pm

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் தான் ப்ரியங்கா. இவர் தொகுத்து வழங்குவதை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘பிக்பாஸ் சீசன் 5’ கலந்து கொண்ட பின்னர் ப்ரியங்காவிற்கு மேலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் சென்றதால், விஜய் டிவியில் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சியை மாகாபாவும், மைனா நந்தினி தொகுத்து வழங்கி வந்தனர்.
இதனையடுத்து, நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ப்ரியங்கா ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சிக்கு மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

தற்காலிகமாக தொகுத்து வழங்கி வந்த மைனா நந்தினி இந்நிகழ்ச்சியிலிருந்து விலகினார். மீண்டும், ஒரே வாரத்தில் மீண்டும் ‘மைனா’ நந்தினியே தொகுத்து வழங்க நியமிக்கப்பட்டுள்ளார். தனது பிக்பாஸ் நண்பர்களான பாவனி, அபிஷேக், மதுமிதா உள்ளிட்டோருடன் ஐதராபாத் சென்றுள்ளார்.

இதனால், ஷூட்டிங்கிற்கு பிரியங்கா வரவில்லை. இதனால், கடுப்பான நிகழ்ச்சி குழுவினர், இனி… ‘மைனா’ நந்தினியே தொகுத்து வழங்கட்டும் என்று முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?