என் வாழ்க்கையை நாசமாக்கிய பிரியங்கா – கெரியரை காலி பண்ணிட்டாங்க – VJ பாவனா புலம்பல்!

Author: Shree
30 May 2023, 9:17 pm

பிரபல தொகுப்பாளினியான விஜே பாவனா விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர், வீடியோ ஜாக்கி, பின்னணி பாடகர் மற்றும் நடனக் கலைஞர் என பல திறமைகளை கொண்டு சிறந்து விளங்கி வருகிறார்.

ஒரு நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தது விஜே பாவனா தான். ஆனால், சில வருடங்களாகவே அவர் விஜய் தொலைக்காட்சியில் தலைகாட்டாமல் போயிவிட்டார். இதனிடையே கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பின்னர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியில் ஒளிபரப்பாளராக பணிபுரிகிறார் மற்றும் சேனலுக்காக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இதனிடையே ஏன் விஜய் தொலைக்காட்சியில் பணி செய்யவில்லை என பேட்டி கேட்டதற்கு, எல்லாம் நன்றாக தான் சென்றுக்கொண்டிருந்தது. திடீரென பிரியங்கா என ஒருத்தர் வந்தார். அவரால் என் கெரியரே காலி ஆகிடுச்சு என மறைமுகமாக கூறினார்.

விஜய் டிவியின் ஸ்டைலே இப்போ வேற…. அவர்கள் இப்போது நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு செல்வதே நோக்கமாக வைத்துள்ளார்கள். அதற்கு பிரியங்கா ஆப்டாக இருந்ததால் அவரையே எல்லா நிகழ்ச்சிகளிலும் போட்டு என்னை போன்ற ஆட்களை வெளியேற்றிவிட்டர்கள்.

vj priyanka - updatenews360

என்னுடைய ஸ்டைலுக்கு அது சரியாக வராது. இதனால் நான் மீண்டும் விஜய் டிவிக்கு வர வாய்ப்பு இல்லை என்று அவர் கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் அவர் கூறிய இந்த தகவல் தற்போது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?