மகளை பிக்பாஸுக்கு அனுப்பிட்டு இப்படி பண்றீங்களே வனிதா – என்னனு பாருங்க!

Author: Shree
13 October 2023, 4:33 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இதனிடையே, கடந்த வாரம் வனிதாவின் மகள் ஜோதிகாவின் கல்வி குறித்து விசித்ரா விமர்சனம் செய்துகேலி செய்துள்ளார். ஒருகட்டத்தில் அதை பொறுத்துக்கொள்ளமுடியாத ஜோவிகா அனைவர் முன்னிலையில் விசித்ராவை வெளுவெளுன்னு வெளுத்துக்கட்டிவிட்டார். இது மிகப்பெரிய அளவில் வைரலாக பேசப்பட்டது.

இந்நிலையில் வனிதா தனது மகள் ஜோவிகாவை பிக்பாஸுக்கு அனுப்பிவிட்டு இளைய மகளுடன் ஜாலியாக ஊர் சுற்றி என்ஜாய் செய்து வருகிறார். பேங்காக்கிலிருந்து திரும்பி வந்த இளைய மகளுடன் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்ஸ் மகளை பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பிட்டு எந்தவித டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக இருக்கியேமா கேள்வி கேட்டு வருகிறார்கள்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?
  • Close menu