வாரி குவிக்கும் “அந்தகன்” வசூல்… மாஸ் காட்டும் பிரசாந்த் – எத்தனை கோடி தெரியுமா?

Author:
12 ஆகஸ்ட் 2024, 12:08 மணி
Quick Share

நடிகர் பிரசாந்த் 90ஸ் காலகட்டத்தில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்து கொண்டிருந்தார். பீக்கில் இருந்த சமயத்தில் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து பல வருடம் ஒதுங்கியிருந்தார். திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் தற்போது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கி இருக்கிறார்.

இவர் “அந்தகன்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் ஆன ஆயிஷ்மான் குரானா நடிப்பில் வெளிவந்த “அந்தாதூன்” படத்தின் தமிழ் ரீமேக் தான் “அந்தகன்” திரைப்படம். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 9ம் ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்கி உள்ளார். இப்படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த் போன்றோர் நடிக்கிறார்கள். படம் எப்போதோ ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில், இயக்குனர் மாற்றம்..கொரோனா பாதிப்பு என அடுத்தடுத்து படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. அதன் பின்னர் ஒரு வழியாக ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த விவரம் தற்போது இணையத்தில் வெளியாக எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது இப்படம் வெளியாகிய தற்போது வரை கிட்டத்தட்ட ரூ. 3.5 கோடி வரை வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. . இந்த படத்தின் பட்ஜெட் ரூ.15 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. பல வருட பல வருடங்கள் கழித்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் பிரசாந்துக்கு இந்த திரைப்படம் மகுடம் சூட்டிவிட்டது என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 220

    2

    0