செம்ம கம் பேக்;பிரசாந்த் நடிக்கும் அந்தகன்; வெளியான த்ரில் டிரெய்லர்,..

Author: Sudha
14 July 2024, 3:51 pm

இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் இயக்கத்தில், நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரஷாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அந்தகன்’

ஹிந்தியில் வெற்றி பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்.தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட அந்தாதூன் படம் தற்போது தமிழில் அந்தகன் என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

அந்தகன் படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்கவிருப்பதாக முதலில்அறிவித்த படக்குழு, பிறகு இயக்குநரும், பிரஷாந்தின் தந்தையுமான தியாகராஜன் இயக்குவதாக அறிவித்தது.

அந்தகன் படத்தில் சிம்ரன், யோகிபாபு, சமுத்திரக்கனி போன்றோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு டிஸ்ரிபியுசன் செய்கிறார். .

வருகிற ஆகஸ்ட் மாதம் திரைப்படம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அந்தகன், டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

அந்தகன் திரைப்படத்தில் கண் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியாக பிரசாந்த் நடித்துள்ளார்.சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.பிரஷாந்துக்கு நல்ல கம் பேக் படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் பிரசாந்த், தற்போது விஜய் நடிப்பில் உருவாகும், ‘கோட்’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 143

    0

    0