அனிரூத்தா வேண்டாவே வேண்டாம்… அதை செய்ய சொல்லாதீர்கள் பட்டது போதும் என ஒதுங்கிய பிரபல நடிகை..!

Author: Vignesh
22 December 2022, 6:45 pm

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

andrea jeremiah - updatenews360

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

Andrea-Jeremiah-updatenews360-1


சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், ஆண்டிரியாவின் 17 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இது வரை அனிரூத்தின் இசையில் பாடல் பாடவில்லை.

andrea anirudh - updatenews360

ஆரம்பகட்ட அனிருத்தின் இசை வாழ்க்கையில் இருவரும் ரகசிய காதலில் இருப்பதாகவும் அவருடன் நெருக்கமாக முத்தமிட்ட புகைப்படங்களும் லீக்கானது.

இதை பல மேடைகளில் ஆண்ட்ரியாவும் அனிரூத்தும் உண்மையை கூறி வந்தனர். இதன் காரணமாகவே அனிரூத் இசையில் ஆண்ட்ரியா பாடவில்லையாம்.

  • Bigg Boss Season 8 tamil Voice Over Artist பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவரா.. எல்லா மொழியிலும் பிண்றாரே..!!
  • Views: - 593

    0

    1