அந்த பொறம்போக்கு.. ‘என் டீ-ஷர்ட் உள்ள கையவிட்டான்’.. மோசமான அனுபவத்தை கூறிய ஆண்ட்ரியா..!
Author: Vignesh2 March 2024, 10:50 am
தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஆண்ட்ரியா. இவர் முதலில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் ஆண்ட்ரியா படங்களில் மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.
தொடர்ந்து தமிழில் சில வெற்றிப்படங்களில் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா தமிழை தாண்டி தெலுங்கு படங்களிலும் பாட்டு பாடி உள்ளார். அத்துடன் வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் மூலம் அவருக்கு மார்க்கெட்டும் உயர்ந்தது. இன்றளவும் சரிவை சந்திக்காமல் அப்படியே ஹிட் ஹீரோயின் என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார் ஆண்ட்ரியா.
இவரின் சிறந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது. ஆம், பிரபல அரசியல் வாரிசு நடிகரின் காதல் வலையில் சிக்கி ஏமாந்துவிட்டார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஆண்ட்ரியா சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்கமால் இருந்து வந்தார். அதன் பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்கில் இறங்கி நடிப்பு, பாடல் என படு பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசிய ஆண்ட்ரியா தனக்கு நடந்த மோசமான அனுபவங்களை பற்றியும் பேசியுள்ளார். அதில், நான் சிறுவயதாக இருக்கும் போது என்னை ஆபாசமாக தீண்டியது நடந்திருக்கிறது. உதாரணமாக, பைக்கில் வந்து பின்னாடி தட்டிவிட்டு செல்வார்கள். ஆனால், அதை நாங்கள் சகஜம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அது தவறு அப்படி இருப்பதனால்தான் இன்று சிலர் சொல்லவே கூசும் நிகழ்வுகள் எல்லாம் பெண்களுக்கு சமுதாயத்தில் நடந்து வருகிறது என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் பேசுகையில் அவர், சிறு வயதில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் ஒன்றையும் கூறி இருக்கிறார் ஆண்ட்ரியா. தனக்கு 11 வயது இருக்கும்போது தாங்கள் பேருந்தில் வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்தோம். அப்போது, திடீரென்று தனக்கு பின்னால் யாரோ கை வைப்பது போல இருந்தது. அதை முதலில் என்னுடைய தந்தையின் கை என்று நினைத்தேன். ஆனால், திடீரென்று என் டீ ஷர்ட்டுக்குள் அந்த கை நுழைந்தது. இதைப் பற்றி நான் என்னுடைய அம்மா அப்பா இருவரிடமும் சொல்லவில்லை.
நானே கொஞ்சம் முன்னாள் சென்று அமர்ந்து கொண்டேன். இதை நான் ஏன் என்னுடைய பெற்றோர்களிடம் சொல்லவில்லை என்று தெரியவில்லை. என் அப்பாவிடம் சொல்லி இருந்தால், அவர் கண்டிப்பாக ஏதாவது செய்திருப்பார். ஆனாலும், இது போன்ற விஷயமெல்லாம் நடந்தால் நாம் வெளியில் சொல்வதில்லை. சமுதாயத்தில் இவ்வாறான சில பொறம்போக்குகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனென்றால், நாம் அந்த வகையில் நமது சமூகத்தால் வளர்க்கப்பட்டு இருக்கிறோம். இதை பற்றி நீங்கள் பெரிதாக பேச வேண்டாம் என்று சமூகம் விரும்புகிறது என ஆண்ட்ரியா பேசியுள்ளார்.
\