15 நிமிட நிர்வாண காட்சியில் ஆண்ட்ரியா.. கட்டாயப்படுத்தியதால் நடித்தேன்.. பகீர் தகவல்.. !

Author: Rajesh
27 April 2022, 4:39 pm

வித்தியாசமான திரைக்கதைகளைக் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆண்ட்ரியா, வடசென்னை, தரமணி மற்றும் ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இப்போது, பிசாசு 2 படத்தை நடித்து முடித்துவிட்டு, நோ என்ட்ரி படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘புஷ்பா தி ரைஸ்’ படத்தில் ஹிட் அடித்த ‘ஊ சொல்றியா மாமா’ பாடலை ஆண்ட்ரியா தான் பாடியிருந்தார்.

சமீபத்தில் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே ரிலீஸாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இப்படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பத்தாகவும் தகவல் வெளியானது. ரிலீஸூக்கு படம் தயாராகி வரும் நிலையில், படத்தில் நடித்தது குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். பிசாசு 2 படத்தின் கதையைக் கேட்டபோது 15 நிமிடங்கள் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என இயக்குநர் தெரிவித்ததாகவும், அதில் தனக்கு அப்போது உடன்பாடில்லை எனவும் கூறியுள்ளார்.

கதை தரமானதாக இருந்ததால், இயக்குநரின் கட்டாயத்தின் பேரில் ஒப்புக்கொண்டதாகவும் ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். ‘பிசாசு 2 படத்தில் பேயாக நடித்து முடித்துள்ளேன். விரைவில் படம் ரிலீஸாக இருக்கிறது. படத்தின் கதையைக் கேட்டபோது 15 நிமிடங்கள் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என இயக்குநர் கூறினார். அதில் எனக்கு அப்போது உடன்பாடில்லை. இயக்குநர் கட்டாயப்படுத்தினார். கதை தரமானதாக இருந்ததால் பின்னர் ஒப்புக் கொண்டேன்’ எனத் தெரிவித்துள்ளார். ஆண்ட்ரியாவின் இந்த கருத்து திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Allu Arjun controversy போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
  • Views: - 1913

    1

    0