திருவண்ணாமலை கோவிலில் தரிசனம்…. பக்தி பரவசத்தில் மூழ்கிய ஆண்ட்ரியா – ட்ரெண்டாகும் போட்டோஸ்!

Author:
2 September 2024, 9:59 am

ஆங்கிலோ – இந்தியன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஆண்ட்ரியா ஜெர்மியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி அதன் பிறகு நடிகையாக பச்சை கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் தனது வாழ்க்கையை தொடங்கினார். அதை எடுத்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அவரது நடிப்பு பயணத்திற்கு மைல்கல்லாக அமைந்தது .

andrea jeremiah

தொடர்ந்து ஆண்ட்ரியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. அடுத்து மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை , தரமணி, துப்பறிவாளன், விஸ்வரூபம் 2 , வடசென்னை மாஸ்டர் அரண்மனை 3 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்து பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

andrea jeremiah

இதனிடையே பல்வேறு திரைப்படங்களுக்கு பல வெஸ்டர்ன் பாடல்களை பாடிய பெருமை ஆண்ட்ரியாவுக்கே சேரும். தற்போது நடிகை ஆண்ட்ரியா அறம் படத்தின் இயக்குனரான கோபி நாயனார் இயக்கத்தில் “மனுஷி” படத்தில் நடித்துள்ளார்.அதன் டிரைலர் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

andrea jeremiah

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல்கள் என்னவென்றால் நடிகை ஆண்ட்ரியா திருவண்ணாமலை கோவிலுக்கு திடீர் விசிட் அடித்து சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். அங்கு எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

andrea jeremiah

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. என்ன ஆண்ட்ரியா திடீரென பக்தி பரவசத்தில் மூழ்கி விட்டார்?என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இந்த புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

  • Sex is for pleasure, not for having a baby: Famous actress's bold comment உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!