படப்பிடிப்பின் போது நாய்களுடன் சண்டை போட்ட ஆண்ட்ரியா..? பதறிய படக்குழு..!

Author: Rajesh
30 March 2022, 2:47 pm

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக இருக்கிறார். பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் ஜோடிசேர்ந்து திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

நடிகைகள் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடத்து வருகிறார். அந்த வகையில் ‘நோ என்ட்ரி’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அழகு கார்த்திக் இயக்கியுள்ளார். இவர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். நடிகர் ஜெய் நடிப்பில் உருவான ‘நீயா 2’ படத்தை தயாரித்த ஜம்போ சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியைச் சுற்றியுள்ள காடுகளிலேயே படமாக்கியுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் நிஜமாகவே நாய்களுடன் சண்டையிடும் காட்சியில் நடித்துள்ளாராம் ஆண்ட்ரியா. நாய்களுடன் சண்டையிடும் காட்சி படமெடுக்கும் போது படக்குழுவினர் சற்று பயந்துள்ளனர். ஆனால் ஆண்ட்ரியாவுக்கு சிறு காயம் மட்டுமே ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பாடல்கள் நாளை வெளியாகிறது. மலைப்பிரதேசத்தில் மனிதர்களை வேட்டையாடும் நாய்களிடம் சிக்கும் ஆண்ட்ரியா தப்பித்தாரா இல்லையா என்பது தான் ‘நோ என்ட்ரி’ படத்தின் கதை என அந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் முக்கிய காட்சிகளுக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட15 ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1395

    0

    0