கொல நடுங்க வைக்கும் அர்ஜுன் தாஸ்… திக் திக் நிமிடங்களுடன் “அநீதி” ட்ரைலர்!

Author: Shree
14 July 2023, 10:09 pm

விறல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை மட்டும் இயக்கியிருந்தாலும் அத்தனையும் தரமான கதையாக ஒவ்வொவொன்றும் ஒரு அழுத்தமான விஷயத்தை பேசக்கூடிய வகையில் படமெடுத்து தனித்துவமான இயக்குனர் என முத்திரை பதித்தவர் வசந்தபாலன் . ஆல்பம் படத்தை இயக்கி தனது பயணத்தை துவங்கிய இவர் வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், உள்ளிட்ட பல சிறப்பான படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்ப்போது நடிப்பின் அரக்கன், அடுத்த ரகுவரன் என பெயரெடுத்திருக்கும் அர்ஜுன் தாஸ் வைத்து அநீதி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துஷாரா, அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சற்றுமுன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் உணவு டெலிவரி செய்யும் அர்ஜுன் தாஸ் அதனால் எவ்வளவு அவமானங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார் என்றும் அதனால் அவர் சைக்கோ கொலைகாரனாக மாறுவதாகவும் படம் கூறுகிறது. அதன் காட்சிகள் நிமிடத்திற்கு நிமிடம் நடுங்கவைக்கிறது. இதில் அர்ஜுன் தாஸின் நடிப்பு கொலைநடுங்க வைக்கிறது. இதோ அந்த ட்ரைலர்:

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?