“தாங்கவே முடியல”.. வீடியோ காலில் வந்த ஆபாச அழைப்பு: கதறி அழும் அங்காடிதெரு நடிகை..!
Author: Vignesh22 March 2023, 5:16 pm
வசந்த பாலன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் அங்காடித் தெரு. 2010ஆம் ஆண்டு வெளியாகி இந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சிந்து. இதையடுத்து சினிமாவிலும், சீரியலிலும் நடித்து வந்த சிந்து, கொரோனா காலகட்டத்தில் உணவின்றி தவித்து வருபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார்.
இப்படி சேவை மனம் படைத்த சிந்து, தற்போது கேன்சரால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். அவரின் பரிதாப நிலை குறித்து சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.
2020-ம் ஆண்டு எனக்கு கேன்சர் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, எனது மார்பகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. அன்றிலிருந்து நாட்டு மருத்துவம், ஆங்கில மருத்துவம் என எத்தனையோ வைத்தியம் பார்த்து வருகிறேன். ஆனால் இதிலிருந்து மீள முடியவில்லை.
இதற்காக டாக்டர்களை நான் குறைசொல்லவில்லை. அவர்கள் நன்றாக தான் சிகிச்சை அளித்தார்கள். ஆனால் அவை என் உடலுக்கு ஒத்துழைக்கவில்லை.
நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. அப்புறம் ஏன் கடவுள் எனக்கு இப்படி ஒரு வலியை கொடுக்கிறார் என தெரியவில்லை. வெட்கத்தை விட்டு சொல்ல வேண்டும் என்றால் சாப்பாடுவதற்கு கஷ்டப்படுறேன். வெளிநபர்களிடம் இருந்து கூட கடன் வாங்கிவிடலாம்.
ஆனால் சொந்தக்காரர்களிடம் கடன் வாங்கிவிட்டு ரொம்ப கஷ்டப்படுறேன். ஷகிலா, நடிகர் பிளாக் பாண்டி, ஜெயலட்சுமி என பலரும் எனக்கு சிறுக சிறுக உதவி வருகின்றனர். இதற்கெல்லாம் விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறி உள்ளார்.
இதனிடையே, சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சிந்து தன்னிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் ஒன்றினை பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர் இரவு 12.45 மணிக்கு ஒரு தம்பியிடம் இருந்து ஒரு கால் வந்தது அதில் தன்னிடம் ஒரு பொண்டாட்டியிடம் பேசுவது போல் வாடி போடி என்று பேச ஆரம்பித்ததாகவும், தம்பி 12.45 மணியாகுது நாளைக்கு காலை பேசு என்று கூறியுள்ளார்.
அதற்கு அந்த நபர், இப்போ தான் பேசனும், நான் இப்போதான் ஃபிரியாக இருக்கிறேன் என்ன வேண்டும் எவ்வளவு வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு சிந்து, ஒரு வாரம் 80 ஆயிரம் ஆகுது 5 லட்சம் தேவைப்படுது என்று கூறியதற்கு, 5 ஆயிரம் என்ன 10 லட்சம் தருகிறேன் என கூறியுள்ளார்.
வீடியோக்கால்ல வரமுடியுமா, ஒரு மார்பகம் தான் இல்லை இன்னொரு சைட் காட்டுறீயா நாளைக்கு அக்கவுண்ட்ல காசு போடுறேன்ன்னு என்று மிகவும் கொச்சையாக கூறியதாகவும், இதை சொல்லக்கூடாது என்று நினைத்தேன். சிலர் இப்படியான கேடுக்கெட்டப்படி நடக்குறாங்க என்று அங்காடி தெரு சிந்து கதறி அழுதார்.