அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!

Author: Selvan
20 January 2025, 10:05 pm

வாய்ப்புக்காக ஏங்கும் நடிகர் மகேஷ்

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் பல பேர் சினிமா வாய்ப்புக்காக தேடி சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.ஆனால் தமிழ் சினிமாவில் பலருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் அதை பயன்படுத்தாமல் பின்பு தவிக்கும் சூழ்நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.

அந்த வகையில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த அங்காடித்தெரு படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் மகேஷ்.இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Tamil actor Mahesh struggles

இவருடைய முதல் படமான அங்காடித்தெருவில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்,அதுமட்டுமில்லாமல் படத்தில் ஜி வி பிரகாஷ்குமார் இசையில் வெளிவந்த அணைத்து பாடல்களும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு நிறைய இயக்குனர்கள் அவரை அணுகி கதையை சொன்ன நிலையில்,அவருக்கு எந்த கதையை தேர்ந்தெடுத்து நடிப்பது என குழப்பத்தில் இருந்தார்,மேலும் வலுவான கதைக்களத்தை தேர்ந்தெடுக்காமல் நடித்ததால் வெற்றியை ருசிக்க முடியவில்லை.

இதையும் படியுங்க: வசூல் ராஜாவாக மாறிய விஷால்…மதகதராஜா படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..!

அந்த நேரத்தில் விஜயசேதுபதி நடிப்பில் வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடிக்க முதலில் மகேஷை தான் படக்குழு அணுகியுள்ளனர்,அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை,அடுத்து எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் உள்ள ஷர்வான் கதாபாத்திரமும் இவருக்கு வந்ததே.மேலும் அதர்வா நடிப்பில் வெளியான ஈட்டி திரைப்படமும் நடிகர் மகேஷுக்கு வந்த வாய்ப்பு தான்.

இப்படி தேடி தேடி வந்த வாய்ப்பை தவறவிட்ட நடிகர் மகேஷ் நாளடைவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.தற்போது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க வாய்ய்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?