அங்காடித்தெரு பட நடிகை திடீர் மரணம்… கடைசி நேரத்தில் பிரபலம் வெளியிட்ட பதிவு!!!
Author: Udayachandran RadhaKrishnan7 August 2023, 8:54 am
அங்காடித்தெரு பட நடிகை திடீர் மரணம்… கடைசி நேரத்தில் பிரபலம் வெளியிட்ட பதிவு!!!
அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலமாக பரீட்சையமான சிந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக போராடி கொண்டு இருந்த நிலையில் இன்று அதிகாலை 2.15க்கு காலமானார்.
அங்காடித் தெரு படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தாலும் ரசிகர்களை கவர்ந்திருப்பார் நடிகை சிந்து. இந்த படத்தின் மூலம் அவர் பிரபலமானார். ஆனால் அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் கொஞ்சு நஞ்சமில்லை.
குழந்தையாக இருக்கும்போதே அவருடைய தந்தை சத்யம் ஸ்டூடியோவில் மணிகளை கோர்க்கும் வேலை செய்து வந்த நிலையில் அங்கு சிந்துவும் சென்று இருக்கிறார்.
பிறகு குழந்தை நட்சத்திரமாக பல சினிமாக்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.பல படங்களில் நடித்திருந்தாலும் வீட்டில் வறுமை தலைவிரித்து ஆடி இருக்கிறது. அதுவும் அம்மா இவர் குழந்தையாக இருக்கும் போது இறந்துவிட்டாராம்.
இதனால் அவருடைய தந்தை சிந்துவிற்கு 14 வயது இருக்கும் போது திருமணம் முடித்து வைத்து விட்டாராம். திருமணத்திற்கு பிறகு ஒரு குழந்தைக்கு அம்மாவாக மாறிய சிந்து திருமணம் ஆன சில நாட்களில் இருந்தே கணவர்களின் கொடுமையால் அதிகமாக கஷ்டங்களை அனுபவித்து இருந்தாராம். அவருடைய கணவர் குடித்துவிட்டு தினமும் வந்து அடித்து துன்புறுத்துவாராம்.
அதனால் இரண்டு வருடங்களில் தன்னுடைய அப்பா வீட்டுக்கு சிந்து போயிருக்கிறார். தன்னுடைய குழந்தையை வளர்ப்பதற்காக சிந்து பல திரைப்படங்களில் நடித்தும் ஹோட்டல், சித்தாள் போன்ற வேலை கிடைத்த வேலைகள் எல்லாம் செய்து வந்திருக்கிறார். அந்த சமயத்தில் சிந்துவின் அப்பாவும் இறந்து விட்டாராம். திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த சிந்துவுக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது என்றால் அங்காடி தெரு திரைப்படம் தான்.
இந்த திரைப்படத்தில் இவர் ஒரு விபச்சாரம் செய்யும் பெண்ணாக நடித்திருப்பார். நம்பரை கணேசன் திருமணம் செய்து அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது போன்று சீன் இருக்கும். அந்த நிலையில் சிந்து செண்டிமெண்ட் வசனம் பேசும் பலருடைய மனதையும் கரைத்து இருக்கும். இந்த நிலையில் சிந்துக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் இருந்ததால் அவர் ஹாஸ்பிடலுக்கு சென்று செக் பண்ணி பார்த்தபோது அவருக்கு புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புற்று நோய்க்கான மருத்துவ செலவு அதிகம் இருப்பதால் அவருடைய கையில் இருந்த பணம் சேமிப்பு எல்லாம் ஹாஸ்பிடல் செலவு செய்ய முடிந்துவிட்டது. பிறகு எந்த பணமும் இல்லாமல் திரை துறையில் பலருடைய உதவியை கேட்டு சென்றிருக்கிறார்.
ஒரு சிலர் அவருக்கு உதவிகளை செய்திருந்தாலும் பலர் கண்டுகொள்ளாமல் விலகிப் போய் இருக்கின்றனர். வலிகளோடு இத்தனை வருடங்களாகவே அதில் போராடிக் கொண்டிருந்த சிந்து இன்று அதிகாலை 2:15 மணி அளவில் இயற்கை எய்திருக்கிறார். அவருடைய ஆன்மா சாந்தி அடைய பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.