தனுஷ் மருமகனுடன் ரொமான்ஸ் செய்யும் குட்டி நயன்.. இளசுகளை வைத்து ரொமான்டிக் மூவி..!

Author: Vignesh
15 February 2024, 7:20 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் , வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் எந்த இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் தனுஷ் வெளியிட்டிருந்தார். ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததால் தனுஷ் தனது அடுத்த படமான 50 படத்திற்காக தயாராகி வருகிறார்.

இந்நிலையில், தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புக்கு பின்னர் தானே நடித்து இயக்கம் டி50 படத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ளார். இதனை தொடர்ந்து, அவரது இயக்கத்தில் மூன்றாவது படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது.

இதில், தனுஷ் இயக்கத்தில் டி3 படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில், நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் அவருடன் எடுத்த புகைப்படம் சமீபத்தில் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில், தனுஷ் இயக்கும் இப்படத்தில் அவரது அக்கா மகனை ஹீரோவாக நடிக்க வைக்க போகிறார் என்றும், சென்னையில் இந்த படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

dd3-dhanush

மேலும், இந்த படத்தில் ஹீரோயினாக தமிழில் அறிமுகமாக உள்ள நடிகை அனிகா சுரேந்திரன் என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் அஜித்தின் ரீல் மகளாக நடித்த அனிதா தற்போது18 வயதை கடந்த பின்னர் தமிழில் ஹீரோயின் ஆக அதுவும் தனுஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

anikha surendran - updatenews360

இந்நிலையில், தனுஷ் இயக்கி வரும் டி-50 படத்தின் டைட்டில் நிலவுக்கு என் மேல் என்ன கோபம் என்ற டைட்டிலுடன் தனுஷ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

dhanush

இதில் அனிகா மேத்யூ தாமஸ், பிரியா வாரியார், பாவிஷ் உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அனிகா அறிமுகமாகும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 334

    0

    0