இதென்னடா.. அனிகாவுக்கு வந்த சோதனை..- அதை பண்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கலாம்..!
Author: Vignesh6 July 2023, 3:30 pm
தமிழ் சினிமாவை பொருத்தவரை எண்ணற்ற குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து இருக்கின்றனர். பேபி ஷாலினியில் துவங்கி மீனாவின் மகள் நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலமடைந்துள்ளனர்.
அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றியை கொடுத்த என்னை அறிந்தால், விசுவாசம் உள்ளிட்ட படங்களில் தல அஜித்துக்கும் நயன்தாராவுக்கும் மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் குழந்தை நட்சத்திரமாக பிரபலம் அடைந்தார். மேலும் இவர் மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்ரால், ஜெயம் ராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார்.
விசுவாசம் திரைப்படத்திற்குப் பின்னர் பலரும் இவரை குட்டி நயன்தாரா என்று தான் செல்லமாக அழைத்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது அனிகா பல படங்களில், கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக 2020 ஆம் ஆண்டு வெளியான கப்பேலா என்ற ரீமேக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். புட்ட பொம்மா என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மலையாளத்தில் உருவாகியிருந்த ஓ மை டார்லிங் என்ற படத்தில் அனிகா நடித்திருந்தார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான போது லிப் லாக் காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்ததால் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார்.
முதல் படத்திலேயே நயன்தாராவையே மிஞ்சி விட்டீர்கள் என்ற விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அனிகா கதைக்கு அந்த காட்சி தேவைப்பட்டதால் தான் நடித்ததாகவும், அந்த காட்சியில் ஆபாசம் கிடையாது எனவும், விளக்கம் அளித்திருந்தார்.
மேலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், கடந்த சில மாதங்களாகவே எக்கசெக்கமாகவே கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டும் படங்களில் கவர்ச்சியை அள்ளி தெளித்தும் நடித்து வரும் அனிகாவிற்கு இன்னும் தமிழில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.
இதனால், வருத்தத்தில் உள்ள அனிகா பேசாமல் கவர்ச்சியை காட்டாமல் இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். இப்ப யோசிச்சு என்ன பண்றது என்று இணைய வசிகளும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.