19 வயசிலே இம்புட்டு சொத்தா? அஜித்தின் ரீல் மகளை பார்த்து வாய்பிளக்கும் நெட்டிசன்ஸ்!

Author: Shree
1 December 2023, 12:34 pm

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அனிகா கேரளா மாநிலத்தை சேர்ந்த அழகான குழந்தையாக திரைத்துறையில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் விஸ்வாசம் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரை அஜித்தின் ரீல் மகள் என்று அழைத்து வருகின்றனர். மேலும் சிலர் குட்டி நயன்தாரா என்றும் அழகைக்கப்பட்டு வருகிறார்.

anika -updatenews360

என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் இவர் மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்ரால், ஜெயம் ராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது அனிகா பல படங்களில், கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக 2020 ஆம் ஆண்டு வெளியான கப்பேலா என்ற ரீமேக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். புட்ட பொம்மா என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் ஓ மை டார்லிங் என்ற படத்தில் லிப் லாக் படுக்கையறை காட்சிகளில் நடித்து மோசமான விமர்சனத்திற்கு ஆளாகினார்.

இதனிடையே, எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வரும் அனிகாவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. 19 வயதாகும் அனிகா ஒரு ஆண்டுக்கு ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை வருமானம் பெறுகிறாராம். அத்துடன் சொகுசு கார், பங்களா என கிட்ட ரூ. 16 கோடிக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறாராம். இந்த வயசிலே இம்புட்டு சொத்தா என எல்லோரும் வியந்து விட்டனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 342

    0

    0