2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா. ‘குட்டி நயன்தாரா’ என அழைக்கப்படும் அனிகா கதாநாயகியாக நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஓ மை டார்லிங்’. ரொமான்டிக் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஆல்ஃப்ரெட் டி சாமுவேல் இயக்கியுள்ளார். இதில் மெல்வின் ஜி பாபு நாயகனாகவும் நடித்துள்ளார்.
இதன் டிரைலர் வெளியாகி, அதில் இடம்பெற்ற முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் குறித்து சோசியல் மீடியாவில் அதிகளவில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ஓ மை டார்லிங் படம் திரையில் வெளியானது. படம் படுமோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள கிளாமர் காட்சிகள் குறித்து அனிகா பேசியபோது,”இந்தத் திரைப்படம் முழுநீள காதல் கதை எனும்போது அதில் முத்தக்காட்சிகள் தவிர்க்க முடியாதது.
இயக்குநர் கதையில் முத்தக் காட்சிகளின் முக்கியத்துவம் குறித்து சொன்னார். கதைக்குத் தேவைப்பட்டதால்தான் நடித்தேனே தவிர அதில் ஆபாசம் எதுவும் இருக்காது. படம் பார்க்கும்போது அது புரியும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை அனிகாவிடம் முத்தக் காட்சியில் நடித்த போது சங்கடமாக இருந்ததா? என ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதில் அளித்திருக்கும் அனிகா,”நடிக்கும்போது அந்த அளவு உணரவில்லை. மக்கள் இதனை இவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டது தான் வினோதமாக இருக்கிறது. தர்ம சங்கடமாகவும் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.