பட விழாவில் ரசிகர் சொன்ன அந்த வார்த்தை…ஷாக் ஆன நடிகை அனிகா..!
Author: Selvan11 February 2025, 6:26 pm
அனிகா I LOVE YOU..!
நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வருகின்ற பெப்ரவரி 21 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது,இதனால் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.
இதையும் படியுங்க: வசனமே இல்லாமல் மாஸ் காட்டிய ஹீரோ…விருதுகளை வாரி குவித்த சூப்பர் ஹிட் படம்..!
அப்போது படத்தில் நடிகையாக நடித்துள்ள அனிகா பேசி முடித்து விட்டு இருக்கையில் அமரும் போது ரசிகர் ஒருவர் அவரை பார்த்து அனிகா I LOVE YOU என்று கத்துவார்,அதற்கு மேடையில் அவர் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பா.பாண்டி,ராயன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் தற்போது 3 வது படத்தை தயாரித்துள்ளார்,நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் உட்பட பல புதுமுக இளைஞர்கள் நடித்துள்ளனர்.வழக்கமான காதல் காட்சி,காதல் தோல்வி போன்ற கதையை வைத்து தனுஷ் எடுத்துள்ளார்,மேலும் இப்படத்தில் தனுஷ் கேமியோ ரோலில் நடித்துள்ளார்,படத்திற்கு ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் அருண் விஜய் உட்பட பலர் பங்கேற்ற படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய நடிகை அனிகா,படத்தில் நடித்தது குறித்து தன்னனுடைய அனுபவத்தை கூறி முடித்து,அமரும் போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் அவருக்கு I LOVE YOU என்று ப்ரொபோஸ் செய்வார்,உடனே அனிகா வெட்கத்தில் சிரித்து கொண்டு இருப்பார்,பக்கத்தில் இருந்த அருண் விஜய் அனிகா வெட்கப்படுவதை ரசித்து கொண்டிருப்பார்.
அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளரானா RJ விஜய் உடனே ரசிகரை கலாய்த்து பேசுவார்,தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.