கடலோரம் வாங்கிய காற்று …. அளவான கவர்ச்சியில் அழகா போஸ் கொடுத்த அனிகா!

Author:
19 August 2024, 12:05 pm

குழந்தை நட்சத்திரமாக அனிகா சுரேந்திரன் தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்து அறிமுகமானார். அதை அடுத்து விஸ்வாசம் திரைப்படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்து எல்லோரது கவனத்தை ஈர்த்தார். கேரள மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் மலையாள திரைப்படங்களில் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக பேபி அனிகா என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

அதன் பிறகு தான் இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது. விசுவாசம் திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய பெயரும் புகழும் கிடைத்தது என்றே சொல்லலாம். முதல் முதலில் கௌதம் மேனன் தான் இவரை தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தி வைத்தார்.

தொடர்ந்து தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த அனிகா சுரேந்திரன் தற்போது 19 வயதை எட்டி இருக்கும் நிலையில் டீன் ஏஜ் வயதில் ஹீரோயினாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

இவர் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து படுக்கையறை காட்சிகள் முத்த காட்சிகள் உள்ளிட்டவற்றில் நடித்த முகம் சுளிக்க வைத்தார். இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அனிகா சுரேந்திரன் அவ்வப்போது தனது கிளாமர் அழகான புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது பீச்சில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ