பாலிவுட்டையே அதிரவைத்த “அனிமல்”…. ரூ. 1000 கோடியை நெருங்கும் வசூல்!

Author: Rajesh
18 December 2023, 6:22 pm

சந்திப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த அனிமல் எனும் ஹிந்தி படத்தில் ரன்பீர் கபூர் – ராஷ்மிகா நடித்திருந்தனர். அப்பா மகனின் சண்டை , குடும்ப பிரச்சனை , காதல் என அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த அனிமல் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

டீசர், ரொமான்டிக் பாடல், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்தது. அண்மையில் வெளிவந்த இப்படம் உலகம் முழுக்க நல்ல வசூலை குவித்துள்ளது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் நாளுக்கு நாள் நல்ல வசூல் குவிந்து வருகிறது.

தற்போது வரை இப்படம் ரூ. 900 கோடி வசூலை ஈட்டியுள்ளது. எனவே விரைவில் இப்படம் ரூ. 1000 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கலாம். இப்படத்தின் வசூல் மேலும் அதிகரித்து பாக்ஸ் ஆபீஸ் ரெகார்ட் பதிக்கலாம் என நம்பமுடிகிறது. இதனால் இனிவரும் ரன்பீர் கபூர் படங்கள் பாலிவுட் ஸ்டார் நடிகர்களையே நடுங்க வைக்கும் என பேசிக்கொள்கிறார்கள்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!