இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.
முன்னதாக ராஷ்மிகா அமிதாப் பச்சனுடன் இணைந்து குட்பாய் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது சந்திப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி வரும் அனிமேல் எனும் ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஹீரோ பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.
டீசர், ரொமான்டிக் பாடல், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்தது. இந்நிலையில் இன்று இப்படம் இன்று உலகம் முழுக்க வெளியாகி ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது. ஆம், படத்தின் ரன்னிங் டைம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் 21 நிமிடத்திற்கு எடுத்து வைத்திருக்கிறார்கள். என்னதான் பெரிய ஹீரோவின் படமாக இருந்தாலும் ஒரு அளவில்லையா? என ஆடியன்ஸ் விளாசித்தள்ளியுள்ளனர். தியேட்டரில் உட்கார்ந்திருந்த எல்லோரும் ஆள விடுடா சாமி என்று அலறி அடித்து ஓடும் அளவுக்கு படத்தை எடுத்து வைத்துள்ளனர். அப்பா மகன் சண்டைக்கு எதுக்கு இவ்வளவு வன்முறை? ரன்பீர் கபூர் வெர்ஷனில் ஒரு அர்ஜுன் ரெட்டி என மோசமாக விமர்சித்துள்ளனர்.
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
புகார் மீது புகார்.. சமீப காலமாகவே வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் அவரை குறித்து பல புகார்களை அடுக்கி…
This website uses cookies.