ஆண்ட்ரியாவை கழட்டிவிட்டு 30 வயது நடிகையுடன் டேட்டிங் : பார்ட்டியில் எல்லை மீறிய அனிருத்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2023, 4:31 pm

தென்னிந்திய அளவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவர் இசையில் கடந்த வருடம் பல திரைப்படங்கள் வெளிவந்தன.

இதில் விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், பீஸ்ட், டாக்டர், டான் என பல படங்களின் ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது.

அனிருத் சில வருடங்களுக்கு முன் நடிகை ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக இருந்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து சர்ச்சையில் சிக்கியது.

இதன்பின் பெரும்பாலும் எந்த நடிகையுடனும் கிசுகிசுக்கப்படாமல் இருந்து வந்த அனிருத், சில மாதங்களாக பிரபல 30 வயது நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அந்த நடிகையும், அனிருத்தும் நெருக்கமான காதல் உறவில் இருப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல் வெளியானது. அது மட்டுமின்றி அந்த நடிகையின் பிறந்தநாள் பார்ட்டியில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கூட வெளிவந்தது.

ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், எங்களுக்குள் எந்த ஒரு தவறான உறவும் கிடையாது என அந்த நடிகையே கூறினார். இதன்பின் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 987

    13

    4