‘விடாமுயற்சி’ முதல் நாளே அனிருத்துக்கு வந்த தலைவலி..தியேட்டர் வாசலில் காத்திருந்த அதிர்ச்சி..!
Author: Selvan6 February 2025, 6:59 pm
அனிருத்துக்கு அபதாரம் விதித்த போலீசார்
இன்று உலகம் முழுவதும் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தை பார்க்க தியேட்டரில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.கிட்டத்தட்ட துணிவு திரைப்படத்திற்கு பிறகு சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித்தை திரையில் காண இருப்பதால் பலரும் விடாமுயற்சி படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வந்தனர்.
பல சினிமா பிரபலங்களும் தியேட்டரில் மக்களோடு மக்களாக படத்தை உற்சாகமாக கண்டு களித்தனர்.இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கிற்கு படத்தை பார்க்க சென்ற அனிருத்துக்கு படம் முடிந்த பின்பு ஒரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது.
இதையும் படியுங்க: இப்போ தான் ‘I AM HAPPY ‘ விக்னேஷ் சிவன் போட்ட திடீர் பதிவு…ரசிகர்கள் கொந்தளிப்பு..!
தியேட்டர் உள்ளே சென்ற அனிருத் ரசிகர்களோடு ஆரவாரமிட்டு புகைப்படங்களை எடுத்தும் படத்தை பார்த்து உற்சாகமாக வெளியே வந்தார்.அப்போது அவர் வந்த கார் நோ பார்க்கிங்கில் இருந்ததால் போக்குவரத்து போலீசார் ஆயிரம் ரூபாய் அபதாரம் விதித்து,அதற்கான பில்லை காரின் முன்பகுதியில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
அதனை பார்த்த அனிருத் அதைப்பற்றி எதுவும் பொருட்படுத்தாமல் காரினில் அமர்ந்து சென்றார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.மேலும் பல ரசிகர்களின் வாகனங்களுக்கும் போலீஸார் அவதாரம் விதித்துள்ளனர்,இதனால் படம் பார்க்க வந்த பலரும் அதிருப்தி ஆகியுள்ளனர்.