லியோ படத்திற்கு பின் பலகோடி சம்பளத்தை உயர்த்திய அனிருத் – ஆடிப்போன திரையுலக வட்டாரம்!
Author: Shree21 October 2023, 11:48 am
தமிழ் திரையுலகில் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் ஒரே இசையமைப்பாளர் அனிருத். ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான், விஜய்யின் லியோ என அடுத்ததடுத்து சூப்பர் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
அடுத்ததாக இந்தியன் 2 , விடாமுயற்சி , தலைவர் 171 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமான இவர், முதல் படம் முதலே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார்.
தொடர்ந்து இடைவெளி இல்லாமல் பல ஹீரோக்களுக்கு மாசான வெற்றி கொடுத்து வரும் அனிருத் தான் கடைசியாக இசையமைத்த லியோ திரைப்படத்திற்கு ரூ.8 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இப்படத்தை தொடர்ந்து தனது சம்பளத்தை மேலும் சில கோடிகள் உயர்த்திவிட்டார். அதன்படி ரூ. 8 கோடி வாங்கிய அவர் ரூ. 10 கோடியாக சம்பளத்தை உயர்த்தி ஒட்டுமொத்த திரையுல வட்டாரத்தையே வாய்பிளக்க வைத்துவிட்டார்.