கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!
Author: Prasad1 April 2025, 6:42 pm
ராக்ஸ்டார் அனிருத்
கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார். Bass கிதார் ஒலியும் Beat ஒலியும் அவரது இசையில் அதிகம் கேட்கக்கூடியவை. இவ்வாறு ஒரு நகர சூழலுக்கேற்ற நவீன இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ஒரு கிராமத்து திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளாராம்.

லப்பர் பந்து
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான “லப்பர் பந்து” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்தை மையப்படுத்திய ஒரு Sports Drama திரைப்படமாக உருவாகியிருந்தது.
இந்த நிலையில் தமிழரசன் பச்சமுத்து தனுஷை வைத்து இயக்கவுள்ள புதிய திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படமும் முழுக்க முழுக்க கிராமத்தை மையமாக வைத்து உருவாகவுள்ள ஒரு திரைப்படம் எனவும் கூறப்படுகிறது.

தனுஷ் தற்போது “இட்லி கடை”, திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதே போல் பாலிவுட்டில் “தேரே இஷ்க் மே” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இத்திரைப்படங்களை தொடர்ந்து தமிழரசன் பச்சைமுத்து இயக்கும் திரைப்படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.