கவின் படத்திலிருந்து விலகிய அனிருத்…படக்குழு திணறல்..!இதெல்லாம் ஒரு காரணமா?

Author: Selvan
23 November 2024, 2:07 pm

கவினின் அடுத்த படம்

நடிகர் கவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ப்ளடி பெக்கர் திரைப்படம்.இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது.

இதனால் தன்னுடைய அடுத்த படமான கிஸ் திரைப்படத்தில் முழு கவனத்துடன் நடித்து வருகிறார்.இதனை டான்ஸ் மாஸ்டர் சதிஷ் அறிமுக இயக்குனராக இந்த படத்தை இயக்குகிறார்.

Anirudh quits Kiss movie

முழுக்க முழுக்க காதல் பின்னணியில் காமெடி கலந்த திரைக்கதையாக அமைத்துள்ளார்.ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

அனிருத் விலகல்

படத்திற்கு இசை அமைக்க ராக் ஸ்டார் அனிருத்தை தேர்வு செய்தனர். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டிருந்த நிலையில் திடீரென படத்தில் இருந்து விலகியுள்ளார்.

ஏற்கனவே தென்னிந்திய திரையுலகில் பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். அவருடைய இசைக்காக,பல்வேறு படக்குழுவினர் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்க: படப்பிடிப்பில் அத்துமீறிய ஹீரோ..செருப்பை காட்டிய குஷ்பூ.!

தற்போது ‘கிஸ்‘ படத்தில் இருந்து அனிருத் விலகியுள்ளதால்,அவருக்கு பதிலாக ஜென் மார்டினை படக்குழு அணுகியுள்ளது. எதற்காக அனிருத் விலகினார் என்ற தகவலை படக்குழு இன்னும் சொல்லவில்லை.

கவின் நடித்த ‘ப்ளடி பெக்கர்‘ திரைப்படத்திற்கும்,ஜென் மார்டின் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 157

    0

    0