ஏ ஆர் ரகுமானை விட அதிக சம்பளம் வாங்கும் அனிருத்? இந்த கொடுமை தட்டி கேட்க யாரும் இல்லையா? கதறும் ரசிகர்கள்!
Author: Shree2 August 2023, 11:33 am
தமிழ் திரையுலகில் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் ஒரே இசையமைப்பாளர் அனிருத். ரஜினி நடிப்பில் உருவாகும் ஜெயிலர், விஜய் நடிப்பில் உருவாகும் லியோ, கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 , ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ளாள் ஜவான் என பிரபலங்களின் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக புக் ஆகி படு பிசியாக இருந்து வருகிறார்.
தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமான இவர், முதல் படம் முதலே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார். தற்போது தென்னிந்திய திரையுலகில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்துள்ள அனிருத் கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டில் அடிக்கல் நாட்ட உள்ளார்.
தொடர்ந்து இடைவெளி இல்லாமல் பல ஹீரோக்களுக்கு மாசான வெற்றி கொடுத்து வரும் அனிருத் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானை விட அதிக சம்பளம் வாங்குகிறாராம். ஆம், ஏ ஆர் ரகுமான் ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால், அனிருத் ஜவான் படத்திற்கு இசையமைக்க ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியிருப்பது திரையுலகினரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இதனை கேள்விப்பட்டதும் ஏஆர் ரஹ்மானின் தீவிர ரசிகர்கள், செம கடுப்பாகிவிட்டார்கள். ஏஆர்ஆர் இசையை யாருடனும் ஒப்பிடாதீர்கள். அனிருத்தின் இசை இன்ஸ்டா ரீல்ஸுகாக மட்டுமே பொருத்தமாக உள்ளது. அப்படித்தான் நேற்று வெளியான ஜவான் படத்தின் சிங்கிள் கேட்டுவிட்டு ட்ரோல் செய்துள்ளனர். ஆனால் அனிருத் ரசிகர்கள் அதை கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.