சூப்பர் ஸ்டார் கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுதா? சொன்னா ஷாக் ஆகிடுவீங்க!

Author: Shree
14 June 2023, 9:34 pm

2012ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே மிக பிரபலம் அடைந்தவர் அனிருத். இவரது இசையில் 3 படத்தில் இடம்பெற்ற “Why This Kolaveri Di” பாடல் செம வைரல் ஆகி யூடியூப் தளத்தில் ரெகார்ட் பிரேக் செய்தது. தற்போது பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மாரி, மான் கராத்தே, நானும் ரவுடி தான், பேட்ட, டாக்டர், பீஸ்ட், டான்,காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம் என பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி பாடல்கள் செம ஹிட் ஆகி அதற்கும் பல விருதுகளை குவித்துள்ளார். மேலும், வேறு இசையமைப்பாளர் திரைப்படங்களில் ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார். பல மியூசிக் ஆல்பம்களையும் வெளியிட்டுள்ளார்.

அஜித், விஜய், கமல், ரஜினி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் அதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதைய இளம் தலைமுறையினர்களுக்கு பேவரைட் ஆக மாறியுள்ளார். இந்நிலையில் அனிருத் குழந்தையாக இருந்தபோது ரஜினி அவரை தூக்கி வைத்திருக்கும் போட்டோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. முதலில் இந்த போட்டோவை பார்த்தது பலரால் அடையாளமே கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அனிருத் என தெரிந்ததும் செம ஷாக் ஆகி விட்டனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 311

    1

    0