ஒரு coffee விலையே இவ்வளவா? சினிமாவை தாண்டி கோடீஸ்வர தொழிலதிபராக வாழும் அனிருத்!

Author: Rajesh
31 January 2024, 3:57 pm

தமிழ் திரையுலகில் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் ஒரே இசையமைப்பாளர் அனிருத். ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான், விஜய்யின் லியோ என அடுத்ததடுத்து சூப்பர் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

அடுத்ததாக இந்தியன் 2 , விடாமுயற்சி , தலைவர் 171 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமான இவர், முதல் படம் முதலே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார்.

தொடர்ந்து இடைவெளி இல்லாமல் பல ஹீரோக்களுக்கு மாசான வெற்றி கொடுத்து வரும் அனிருத் தான் கடைசியாக இசையமைத்த லியோ திரைப்படத்திற்கு ரூ.8 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இப்படத்தை தொடர்ந்து தனது சம்பளத்தை மேலும் சில கோடிகள் உயர்த்திவிட்டார். அதன்படி ரூ. 8 கோடி வாங்கிய அவர் ரூ. 10 கோடியாக சம்பளத்தை உயர்த்தி ஒட்டுமொத்த திரையுல வட்டாரத்தையே வாய்பிளக்க வைத்துவிட்டார்.

அனிருத் இசையை தாண்டி தொழிலிலும் கோடிக்கணக்கில் கல்லா கட்டி வருகிறாராம். ஆம், சென்னையில் சம்மர் ஹவுஸ் ஈட்டறி(The Summer House Eatery) என்ற லக்ஸரி ஓட்டல் வருகிறார். சாதாரண காஃபியின் விலையே 30 ரூபாயில் ஆரம்பித்து ரூ. 300 வரைக்கும், சூப் வகைகள் ரூ. 200ல் ஆரம்பித்து 500 வரைக்கும், பாஸ்தா, கேக் பொன்றை ரூ. 300 ஆரம்பித்து ரூ.500 வரைக்கும் விற்கப்படுகிறதாம். இதன் மூலம் அவர் பல கோடி வருமானம் கணிசமாக பார்க்கிறாராம்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 309

    0

    0