அனிருத் இல்லனா ஜெயிலர் இல்ல…. ரஜினிக்காக மாங்கு மாங்குனு செய்த கொடுத்த ராக் ஸ்டார்!

Author: Shree
17 August 2023, 9:51 am

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர். இதனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால் ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர் படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து திரையரங்குகளும் ஃபுல் ஆன நிலையில், ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஜெயிலர் படம் ஹிட் படம் என விநியோகிஸ்தர்கள் அறிவித்துவிட்டனர் .

இந்நிலையில் ஜெயிலர் வெற்றிக்கு முக்கிய காரணமே அனிருத் தான் என திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஆம், பொதுவாகவே படத்தில் பாடல்கள் ஹிட் ஆடிவிட்டால் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துவிடும். அப்படித்தான் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்து படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்தது.

படத்தில் பாடல்கள், ப்ரோமோ, ட்ரைலர் என அனைத்திலும் அனிருத் சிறப்பான சம்பவம் செய்துள்ளார். அது தான் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. ஆம், அனிருத் இல்லை என்றால் இன்று ஜெயிலர் இல்லை என அவர் கூறினார். அது ரஜினிக்கு முன்னதாகவே தெரியும் அதனால் தான் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவரை கட்டி அனைத்து முத்தம் கொடுத்தார். எனவே ஜெயிலர் படத்தின் வசூலுக்கு முக்கிய காரணம் அனிருத் தான் என அவர் கூறியுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!