தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், தனது மூத்த மகன் ஜேசன் சஞ்சய், தற்போது சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். தாத்தா மற்றும் தந்தையைப் போலவே, சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ள ஜேசன், இயக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இது கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தின் பணிகள் கடந்த ஒராண்டாக நடைபெற்று வருகின்றன. காரணம், கதாநாயகனாக நடிக்க யாரும் முடிவெடுக்காததால் இதன் தயாரிப்பு கொஞ்சம் தாமதமாகி உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு இசையமைப்பதாக முதலில் அனிருத் கூறப்பட்டிருந்தார், ஆனால் தற்போது அவர் இசையமைப்பதில் தவிர்ந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக, விஜயின் வாரிசு படத்திற்கு இசையமைத்த தமன் இந்த படத்திற்கு இசையமைப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்று கூறப்படுகின்றது, மேலும் படத்தின் தொடர்பான புதிய அப்டேட்டுகள் டிசம்பர் மாதத்தில் வெளிவருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. அப்பாவை போல் மகன் சினிமாவில் வெற்றி பெற்று சாதனை படைப்பாரா என்பதை நேரில் காண வேண்டியுள்ளது.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.