அனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

Author: Selvan
26 December 2024, 6:54 pm

விடாமுயற்சி முதல் பாடல் தகவல்

நாளுக்கு நாள் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் புது புது அப்டேட் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் படத்தின் இசையமைப்பாளரான ராக் ஸ்டார் அனிருத் தற்போது தன்னுடைய X-தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.முன்னதாக படக்குழு நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் படத்தின் முதல் பாடல் லிரிக் வீடியோ 27 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தது.

இதையும் படியுங்க: “கேம் சேஞ்சர்”பட பாடலுக்கு இத்தனை செலவா…கோடிகளை மட்டுமே குறிவைக்கும் சங்கர்..!

இந்த சூழலில் பாடலை யார் பாடியிருக்கிறார்..பாடலை யார் எழுதியுள்ளார் என்ற தகவலை அனிருத் வெளியிட்டுள்ளார்.இதனால் பாடலின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி நாளை வெளியாகும் விடாமுயற்சி பாடலை பிரபல கிராமிய பாடகரான ஆண்டனி தாசன் பாடியுள்ளார் எனவும் பாடல் வரிகளை தெருக்குறள் அறிவு எழுதியுள்ளார் எனவும் அனிருத் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த பதிவால் அஜித் ரசிகர்கள் வைப் மோடில் உள்ளனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!