ரசிகர்களை பரவசப்படுத்திய அனிருத் ..சிங்கப்பூரில் நடந்த மாயாஜாலம்..!

Author: Selvan
1 December 2024, 11:48 am

“கடவுளே அஜித்தே” பாடல் வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித் தற்போது சினிமா,கார் ரேஸில் மாஸ் காட்டி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

நீண்ட நாட்கள் இவருடைய விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட் வெளிவராமல் இருந்த நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு படத்தின் டீஸர் வெளியாகி,ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் சமூக வலைத்தளங்கள் திணறியது.

Kadavuley Ajithey Song Viral

இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.படத்தில் அனிருத் இசை மற்றும் தீம் மியூசிக் கூடுதல் வலு சேர்க்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

இதையும் படியுங்க: ட்விட்டர் கணக்கை டெலீட் செய்த பிரபல இயக்குநர்..மனைவி கொடுத்த டார்ச்சரா..!

அஜித் ரசிகர்கள் தற்போது “கடவுளே அஜித்தே” என்று தங்களுடைய கரகோசத்தை எழுப்பி வரும் சூழலில்,அனிருத் சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தி இருக்கிறார்.

இவருடைய நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.அந்த நிகழ்ச்சியில் அஜித்தே கடவுளே என்ற பாடலும் ஒலித்து ரசிகர்களை பரவசப்படுத்தியது.

சிங்கப்பூர் மட்டுமின்றி பட்டிதொட்டி எங்கும் “கடவுளே அஜித்தே” வசனம் ரசிகர்களிடேயே நாளுக்கு நாள் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் ஒரு உணவகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் அஜித்தை கொண்டாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!