என் இப்படி பண்றீங்க?கேள்வி கேட்ட ரசிகர்கள்; திகைத்து நின்ற அனிருத்; மிஸ் ஆகும் டுவீட்,..
Author: Sudha11 July 2024, 12:05 pm
எப்போதும் தான் இசையமைத்த பெரிய திரைப்படங்களுக்கு வெளியீட்டிற்கு சில நாட்கள் முன்பாக அது குறித்து எமோஜிக்களுடன் டுவீட் செய்வது அனிருத் வழக்கம். விஜய் நடித்த லியோ, ரஜினியின் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர்,பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் நடிப்பில் வந்த ஜவான் போன்ற திரைப்படங்களுக்கு இப்படி டுவீட் போட்டிருந்தார்.
ஆனால், ‘இந்தியன் 2’ படத்திற்கு இதுவரையில் எந்த பதிவையும் அனிருத் போடவில்லை.
என்ன அனிருத்? என்ன ஆச்சு?இன்னும் பதிவு போடலையா? என ரசிகர்கள் பலரும் அவரைக் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் என தமிழ்த் திரையுலகின் இரண்டு பெரிய ஆளுமைகள் 28 வருடங்களுக்குப் பிறகு இணையும் படம் ‘இந்தியன் 2’.
இப்படத்திற்கு இசையமைக்கப் போகிறார் அனிருத் என்றதுமே பலருக்கும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.முதல் பாகத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது.
அவர் இசையமைக்காமல் அனிருத்துக்கு வாய்ப்பு தருகிறார்களே என்ற கேள்வியும் ஷங்கரிடம் கேட்கப்பட்டது.ரஹ்மான் மிகவும் பிஸியாக இருந்ததால்தான் அனிருத்துக்கு வாய்ப்பு தந்தேன் என ஷங்கரும் அதற்கு விளக்கமளித்து இருந்தார்.