உப்பு தின்ன வீட்டுக்கே ரெண்டகம் செய்த பிரபல இசையமைப்பாளர்: வருத்தத்தில் ரஜினி, ஐஸ்வர்யா..!

Author: Vignesh
11 November 2022, 8:00 pm

தமிழ் சினிமாவில் 3 படத்தின் மூலம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷால் அறிமுகம் செய்யப்பட்டவர் இசையமைப்பாளர் அனிரூத். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இசையமைத்து முன்னணி இடத்தையும் பிடித்து வந்தார்.

சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட பலரின் படங்களுக்கு இசையமைத்து பிளாக் பஸ்டர் மியூசிக்கை கொடுத்துள்ளார்.

UpdateNews360_Aniruth

இதனிடையே தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்துக்கு அனிரூத் தான் காரணம் என்று தனுஷ் விளகி இருந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் ரஜினிகாந்த் குடும்பமும் அனிரூத் மீது கோபத்தில் இருந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தினை எடுக்கவுள்ளார்.

லைக்கா தயாரிக்கும் இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கவுள்ளார். முதலில் இப்படத்தில் அனிரூத்தை தான் இசையமைக்க கேட்டுக்கொண்டார்களாம்.

lal-salaam - updatenews360

ஆனால் அனிரூத் வழக்கம் போல் அனைத்து படத்திலும் 3 கோடி சம்பளமாக பெறுவார். தற்போது இப்படத்திற்கு 5 கோடியாக சம்பளம் கேட்டுள்ளார். ஏற்கனவே ரஜினிகாந்த் கோபமாக இருப்பதால், வளர்த்துவிட்டவர்களிடமே இப்படியே நடந்து கொள்வது என்று அனிரூத் வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

இதன்பின் ரஜினிகாந்த் சிபாரிசில் ஏ ஆர் ரகுமான் கமிட்டாகியிருக்கிறார். ரஜினிகாந்த் குடும்பத்தை அசிங்கப்படுத்திம் விதமாக அனிருத் இப்படி நடந்து கொண்டது தவறானது என்று கோலிவுட்டில் பேச்சு பொருளாக மாறியிருக்கிறது.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…