புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி தம்பதிகள் குறித்து தெரியாத ஆளே கிடையாது என்று சொல்லலாம். இவர்கள் பிரபல நாட்டுப்புறப் பாடகர்கள். இவர்கள் நாட்டுப்புற பாடல்கள் மட்டுமல்லாமல் சினிமாவில் பல்வேறு பாடல்களையும் பக்தி பாடல்களையும் பாடியுள்ளனர்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பல்லவி சமீபத்தில் ஐடி நிபுணர் கௌதம் ராஜேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருப்பது நமக்கு தெரியும். ஆனால், இவர்களுக்கு ஒரு மகன் பிறந்திருந்ததாகவும், சிசேரியன் மூலமாக பிறந்த அந்த குழந்தை நல்ல நிறம் அழகாகவும், இருப்பானாம்.
மகள் இருக்கும் நிலையில், வேண்டுதலுக்கு பின்னர் பிறகு பிறந்தவன். ஆனால், பிறந்த 24 மணி நேரத்துக்குள்ளையே குழந்தை இறந்துவிட்டது. காரணம் மருத்துவர்கள் போட்ட தவறான ஊசி தான் என்னுடைய குழந்தை நெஞ்செல்லாம் எரிந்து விட்டது என்று அழுதவாறு அனிதா குப்புசாமி பேசியுள்ளனர்.