சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் அனிதா சம்பத். இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார்.
மேலும், இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனால் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து இருந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சில நாட்களிலேயே அனிதா ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார்.
அதோடு இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். அதன் பின் இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட பங்கேற்று இருந்தார். தொடர்ந்து சொந்தமாக பிசினஸ் கூட நடந்துவருகிறார். இந்நிலையில் தற்போது அவர் அவர் தனது மோசமான நாட்கள் குறித்து வேதனையை பகிர்ந்துள்ளார்.
அதாவது, என்னுடைய அப்பா இறப்பு என்னை மிகுந்த துயரத்திற்கு உள்ளாகியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக போறேன் என்று சொன்னபோது சந்தோஷமாக போயிட்டு வா என அப்பா சொன்னார். 80 நாட்கள் வீட்டில் இருந்தேன். 20 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தேன். 100 நாட்கள் கழிந்து என்னுடைய வீட்டிற்கு தந்தையை பார்க்கலாம் என சென்றபோது அப்பா இறந்து போன செய்தி தான் வந்தது.
அந்த நிலையில் என்னால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவ்வளவு அந்த துயரமான நேரத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னுடன் விளையாடிய சில போட்டியாளர்கள் எங்க வீட்டுக்கு வந்து ஒரு வார்த்தைக்கு கூட என்னிடம் பேசவே இல்லை, ஒரு சின்ன ஆறுதல் கூட சொல்லவில்லை. அதுமட்டும் இல்லாமல் அந்த நேரத்திலும் என்னை பற்றி நிறைய நெகட்டீவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருந்தது, அது என்னை மேலும் வேதனையில் ஆழ்த்தியது. அப்போது தான் செத்துப் போய் விடலாமா என்று கூட நினைத்தேன் என மிகுந்த கண்ணீருடன் தனது வேதனையை பகிர்ந்துக்கொண்டார்.
SRH-ன் அதிரடி ரன் மழை 2025 ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மெகா ஸ்கோரை அடித்து…
சூப்பர்ஸ்டார் ரஜினியின் முக்கிய வேண்டுகோள்! மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் (CISF) இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை…
தோனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மஹேந்திர சிங் தோனி 2019-ஆம் ஆண்டு சர்வதேச…
சிஎஸ்கே-க்கு ஆதரவு பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்,உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'தக் லைஃப்' திரைப்படக்குழு சென்னை சூப்பர்…
'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் மாற்றம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா,இந்திய அளவிலும் புகழ்பெற்ற நடிகையாக உள்ளார்.கடந்த…
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் – சி.பி.ஐ. இறுதி அறிக்கை! பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்…
This website uses cookies.