பக்கா பொறுக்கி மாதிரியே இருக்க …. செருப்படி பதில் கொடுத்த அனிதா சம்பத்!

Author: Shree
29 May 2023, 9:41 am

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் அனிதா சம்பத். இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார்.

மேலும், இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனால் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து இருந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சில நாட்களிலேயே அனிதா ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார்.

அதோடு இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். அதன் பின் இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட பங்கேற்று இருந்தார். தொடர்ந்து சொந்தமாக பிசினஸ் கூட நடந்துவருகிறார். இந்நிலையில் தற்போது அவர் தனது தோழியுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோவுக்கு நடனமாடியுள்ளார். அதற்கு நெட்டிசன் ஒருவர் “பக்கா பொறுக்கி மாதிரியே இருக்க” என கூறி இருக்கிறார்.

அதை பார்த்து கோபமான அனிதா சம்பத், உன்ன யாரோ அப்படி சொல்லியிருக்காங்க போல அதான் இன்னொருத்தருக்கு சொல்லி ஆறுதல் பார்த்துக்குற , உனக்கு லைக்ஸ் போட்டவனும் எங்கயோ செமயா அடி வங்கியிருக்கான் போல என செம கூலாக பளார் ரிப்ளை கொடுத்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக பலரும் அனிதா சம்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 593

    3

    0