சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். இதன் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா. அதன் பின்னர் இவர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார்.
மேலும், இவர் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் போன்ற படத்திலும் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதனால் சம்பத் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து இருந்தார்.
இதனால் சீக்கிரமாகவே அனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். மேலும், இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட பங்கேற்று இருந்தார். கடந்த சீசனை விட இந்த சீசனில் தான் அனிதாவின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது. இதிலும் இவர் நீண்ட நாட்கள் நீடிக்க முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அனிதாவிற்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. மேலும், இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து தன் கணவருடன் சேர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை அனிதா சம்பத் பகிர்ந்துள்ளார். அதில், பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய போது வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறினேன். அந்த ஆட்டோ ஓட்டுனர் என்னிடம் அம்மா உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று கேட்க ஆம் நான் செய்தி வாசிப்பாளர் டிவியில் வேலை செஞ்சுகிட்டு இருக்கேன் என்று கூறினேன். நீங்க சன் மியூசிக்கல் வரும் மணிமேகலை தானே என்று அவர் சொன்னதும் என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. என்னை வேறொரு பிரபலம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் எத்தனை பேர் இதே போல் என்னை நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து சென்று கொண்டிருந்தபோது இரு இளைஞர்கள் வண்டியில் வந்து ஆளில்லாத அந்த தெருவில் திடீரென நிறுத்தினார்கள். ஒருவன் வேகமாக இறங்கி உங்களிடம் செல்ஃபி எடுக்கணும் என்று கேட்டான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நாம் அந்த அளவுக்கு பிரபலம் கிடையாது. இவர்கள் வேறு செல்பி எடுக்கணும்னு கேக்குறாங்களே, அந்த பையனை பார்த்தால் ரவுடி போல் இருந்தது அது பயமாகவும் இருந்தது. உடனே அவனுடைய நண்பனிடம் டேய் சீக்கிரம் வாடா சன் மியூசிக் மணிமேகலை வந்து இருக்காங்க என்று செல்பி எடுக்க அழைத்தான். நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். பின்னர் அவனிடம் நான் மணிமேகலை கிடையாது நான் செய்தி வாசிப்பாளர் ஆக பணியாற்றி வருகிறேன் என்று தெளிவாக சொல்லிவிட்டு அங்கிருந்து வந்ததாக அணிதா சம்பத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…
நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
This website uses cookies.