சென்னையை பார்பதற்கே பயமா இருக்கு.. வேதனையுடன் அனிதா சம்பத் வெளியிட்ட வைரல் வீடியோ..!

Author: Vignesh
6 July 2024, 5:32 pm

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் அனிதா சம்பத். இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார்.

மேலும், இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதனால் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து இருந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சில நாட்களிலேயே அனிதா ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார். அதோடு இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். அதன் பின் இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட பங்கேற்று இருந்தார். தொடர்ந்து சொந்தமாக பிசினஸ் கூட நடந்துவருகிறார்.

Anitha Sampath - Updatenews360

முன்னதாக, அனிதா சம்பத் எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் நடக்கும் விஷயங்களை தைரியமாக பேசி குரல் கொடுப்பார். அப்படி, சமீபத்தில் நடந்த பிரபல கட்சியின் தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை குறித்து மிகவும் மனம் நொந்து பேசியுள்ளார். இதில், இவர் நேற்று இந்த கொலைக்கு பிறகு சென்னையை பார்க்கவே பயமாக இருக்கிறது. இவ்வளவு பெரிய தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு திட்டமிடல் இல்லாமல் செய்திருப்பார்கள். அப்படி செய்திருந்தால் சரண் அடைந்தவர்கள் உண்மையாகவே கொலை செய்தவர்களா என்று பல கேள்விகளில் ஓடுகிறது என அனிதா சம்பத் அந்த வீடியோவில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!