“சார் அனிதாவை வேலை செய்ய விடுங்க சார்.”அனிதா சம்பத் Photos

Author: Rajesh
23 May 2022, 7:12 pm

செய்தி வாசிப்பாளராக இருந்து அனைவரையும் கவனிக்க வைத்தவர் அனிதா சம்பத். Sun தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். இவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான மரியாதை, இந்த மரியாதை எல்லாம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நன்றாக இருந்தது.

இவர் விளையாடிய விளையாட்டை பார்த்த ரசிகர்களுக்கு இவரை கொஞ்சம் பிடிக்காமல் போனது. தற்போது மீண்டும் செய்தி வாசிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மூன்று வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் நடத்தி வரும் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் பங்கேற்ற பிபி ஜோடிகள் என்னும் நிகழ்ச்சியில் வெற்றியாளர் ஆவார்.

மேலும் 24 மணி நேரமும் ஓடிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத், தற்போது புதுமனை புகுவிழாவில் கணவரோடு நெருக்கமாக நின்று போட்டோக்கள் எடுத்து கொண்டார். “சார் அனிதாவை வேலை செய்ய விடுங்க சார்…” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • Allu Arjun controversy போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
  • Views: - 1411

    1

    0