பிளே பாய் நடிருக்கே தண்ணி காட்டிய அஞ்சலி : விரைவில் டும்டும்டும்..!
Author: Vignesh16 March 2023, 3:00 pm
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களில் நிஜத்தில் ஜோடி சேர்ந்தவர்கள் பலர் உள்ளார்கள். சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, நயன்தாரா-விக்னேஷ் சிவன், சினேகா-பிரசன்னா, கௌதம் கார்த்திக்-மஞ்சிமா என இப்படி பிரபலங்களை கூறலாம்.
இந்த லிஸ்டில் ஜெய் மற்றும் அஞ்சலி இணைவார்கள் என ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்ப்பார்க்கப்பட்டது. எங்கேயும் எப்போதும், பலூன் போன்ற படங்களில் ஒன்றாக நடித்துவந்த இவர்கள் விரைவில் திருமணம் செய்வார்கள் என கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் இப்போது என்னவென்றால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள் என செய்திகள் வெளியானது.
தற்போது நடிகை அஞ்சலி Fall என்ற படத்தில் நடித்துள்ளார். இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் ஜெய்யுடனான காதலால் தான் சினிமா வாழ்க்கை வீணானதா என கேட்கப்பட்டது.
அதற்கு அவர், நான் காதலிக்கிறேன் என்று எப்போதும் சொன்னது கிடையாது. சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எனவே, என்னைப் பற்றி எழுதுபவர்கள் யாரை வைத்து எழுத வேண்டும் எழுதுபவர்கள் அவர்களே முடிவு செய்து விடுவார்கள்.
ஆனால், அதைப் பற்றி நான் பேசியதும் இல்லை பேசப் போவதும் இல்லை இது போன்ற விஷயத்தை நான் செய்யவில்லை எனவே அதைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும் என தெளிவாக தெரிவித்துள்ளார்.
தற்போது அதற்கான நேரம் கிடையாது. எனக்கு திருமணம் நடக்கும்போது நிச்சயம் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் என்று பேட்டி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த மருத்துவரும் தொழிலதிபருமான ஒருவரை நடிகை அஞ்சலி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என மீண்டும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் நடிகை அஞ்சலி நடித்திருக்கும் கூடிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆன பிறகு இவருடைய திருமண அறிவிப்பு வெளியாகலாம் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.