நடிகர் ஜெய்யுடன் காதல் தோல்வியா? – பட வாய்ப்பு குறைந்ததற்கு இது தான் காரணமாம்..! முதன் முறையாக மனம் திறந்த நடிகை அஞ்சலி..!
Author: Vignesh8 December 2022, 11:30 am
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களில் நிஜத்தில் ஜோடி சேர்ந்தவர்கள் பலர் உள்ளார்கள். சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, நயன்தாரா-விக்னேஷ் சிவன், சினேகா-பிரசன்னா, கௌதம் கார்த்திக்-மஞ்சிமா என இப்படி பிரபலங்களை கூறலாம்.
இந்த லிஸ்டில் ஜெய் மற்றும் அஞ்சலி இணைவார்கள் என ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்ப்பார்க்கப்பட்டது. எங்கேயும் எப்போதும், பலூன் போன்ற படங்களில் ஒன்றாக நடித்துவந்த இவர்கள் விரைவில் திருமணம் செய்வார்கள் என கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் இப்போது என்னவென்றால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள் என செய்திகள் வெளியானது.
தற்போது நடிகை அஞ்சலி Fall என்ற படத்தில் நடித்துள்ளார். இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் ஜெய்யுடனான காதலால் தான் சினிமா வாழ்க்கை வீணானதா என கேட்கப்பட்டது.
அதற்கு அவர், நான் காதலிக்கிறேன் என்று எப்போதும் சொன்னது கிடையாது. சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எனவே, என்னைப் பற்றி எழுதுபவர்கள் யாரை வைத்து எழுத வேண்டும் எழுதுபவர்கள் அவர்களே முடிவு செய்து விடுவார்கள்.
ஆனால், அதைப் பற்றி நான் பேசியதும் இல்லை பேசப் போவதும் இல்லை இது போன்ற விஷயத்தை நான் செய்யவில்லை எனவே அதைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும் என தெளிவாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.