2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகை அஞ்சலி ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.
எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.
தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து அதன் பிறகு release ஆகி ஓடாமல் போய்விட்டது. அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் படத்திலும் நடித்தார். தற்போது, அஞ்சலி தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை அஞ்சலி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார். அந்த நபருடன் ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்பால் தன்னுடைய கெரியரை கவனிக்க முடியாமல் போனதால் அந்த உறவு தவறான உறவு என தெரிவித்துள்ளார். கேரியருக்கு தடையாக இருக்கும் உறவை விட கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் சிறந்தது என்றும் நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது மிகவும் சங்கடமாக இருக்கும் என்றும், நம்முடன் நடிக்கும் நடிகக்கூடிய நடிகர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் எதுவும் தவறாக நினைத்து விடுவாரோ என்று நினைக்கத் தோன்றும்.
நடிகைக்கு மட்டும் இல்லை நடிகர்களுக்கும் அப்படித்தான் தோன்றும் என்றும், நெருக்கமான முத்தக்காட்சி நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது ஒரு வித நெருடலாகவே தான் இருக்கும். இது உண்மைதான் ஆனால், படத்தை பார்ப்பவர்கள் ரொமான்ஸ் கட்சியில் நடிக்கும் போது அந்த நடிகர் மற்றும் நடிகை ஜாலியாக இருப்பார்கள் என்று தான் நினைப்பார்கள் என மனம் திறந்து அஞ்சலி பேசியுள்ளார்.
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
This website uses cookies.