பிக் பாஸ் வீட்டிற்குள் சைலண்டாக நுழையும் நடிகை அஞ்சலி..! வைல்டு கார்டு எண்ட்ரி இவரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

Author: Vignesh
7 December 2022, 3:30 pm

பல்வேறு முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கில் நடித்து பிரபலமான நடிகை அஞ்சலி, தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது விறுவிறுப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் நடைபெற்று வருகிறது. 60 நாட்களை எட்டியுள்ள இந்நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் இந்த வார இறுதியில் டபுள் எவிக்‌ஷன் நடக்க இருப்பதாக அறிவித்துள்ளதால், போட்டியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

anjali-updatenews360-1

இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் அசீம், ஜனனி, ஏடிகே, ராம், ஆயிஷா, கதிரவன் ஆகிய ஆறு போட்டியாளர்களின் பெயர்கள் உள்ளனர். இவர்களில் இருந்து தான் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட உள்ளனர். இது ஒரு புறம் இருக்க 50 நாட்களை கடந்தும் ஒரு வைல்டு கார்டு போட்டியாளர்க் கூட பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படாதது பலருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளதால், இந்நிகழ்ச்சி மூலம் படத்தை புரமோட் செய்யும் வேலைகளும் அவ்வப்போது நடக்கும். அந்த வகையில் முதல் மூன்று சீசனில் தான் திரைப்பிரபலங்கள் சர்ப்ரைஸாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று தங்களது படத்தை பற்றி பேசியும், அதன் டிரைலரை போட்டு காட்டியும் புரமோஷன் செய்து வந்தனர்.

anjali-updatenews360-1

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிகம் இருந்ததன் காரணமாக இதுபோன்ற புரமோஷன் பணிகளுக்காக யாரும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படவில்லை. இந்நிலையில், தற்போது நடிகை அஞ்சலி, தான் நடித்துள்ள ஃபால் (Fall) எனும் வெப் தொடரை புரமோட் செய்வதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். இந்த வெப் தொடர் வருகிற டிசம்பர் 9-ந் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதால், இன்று அல்லது நாளைக்குள் அஞ்சலி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற காட்சிகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?