சரக்கு அடிச்சிட்டு படுக்க கூப்பிட்டாங்க… சுஷாந்த் சிங் முன்னாள் காதலி பகீர் பேட்டி..!
Author: Vignesh2 March 2024, 7:57 pm
சுஷாந்த் சிங் உடன் பவித்ர ரிஷ்டா என்ற ஹிந்தி சீரியல் மூலமாக நடித்து பிரபலமானவர்தான் அங்கிதா லோகாண்டே அந்த சீரியலில் இருவரும் சேர்ந்து நடிக்கும் போது காதலித்து வந்தனர். ஆனால், ஒரு சில காரணத்தால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
அதன் பின்னர் அங்கிதா லோகாண்டே விக்கி ஜெயின் என்பவரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து செட்டில் ஆனார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற அங்கிதா லோகாண்டே டிவி சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பற்றி பேசியுள்ளார்.
அதாவது, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனதாகவும், அப்போது தன்னை அழைத்து நீங்கள் இந்த படத்தில் ஹீரோயின் நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என்று கூறியதாகவும், அந்த சமயத்தில் தனக்கு வயது வெறும் 19 தான் என்றும், அவர்கள் அப்படி சொன்னவுடன் ஒரு மாதிரி இருந்தது. மேலும், அந்த நபர் குடித்தும் இருந்தார். நான் அவர்களை திட்டிவிட்டு அங்கிருந்து வந்து விட்டேன் என்று அங்கிதா லோகாண்டே கூறியுள்ளார்.